Posts

Showing posts from March, 2019

நித்தின் சத்யாவின் அடுத்த படம் கிரைம் பாணியில்

Image
சென்னை 28 படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நிதின் சத்யா இவர் ஒரு தாயரிப்பாளர் மற்றும் இயக்குனரும் ஆவார் சில படங்களில் கதாநாயகனாகவும் சில படங்களில் முக்கிய ரோலில் நடித்து உள்ளார். நடிகர் ஜெய்யை வைத்து ஜருகண்டி என்ற படத்தை ஷ்வேத் என்ற கம்பெனி மூலம் தயாரித்தார்,இப்படத்தை தொடர்ந்து க்ரைம் படத்தை தயாரிக்க உள்ளார் இப்படத்தில் வைபவ் வைத்து ஹீரோவாக நடிக்க வைக்க உள்ளார். ஜருகண்டி படத்தில் நிதின் சத்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் அதே போலவே இப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என படக்குழு தெரிவித்து உள்ளது. இப்படம் எப்படி இருக்கும் என திரைக்கு வரும் போதுதான் தெரியும்.

தனுஷ் மற்றும் செல்வ ராகவன் கூட்டணியில் மீண்டும் ஒரு வெற்றி படம்

Image
தனுஷின் புதுப்பேட்டை படத்தின்-2 பாகம் குறித்து பேசிய தனுஷ் தனுஷ் நடிப்பில் வெளியான புது பேட்டை படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது, இன்றளவும் இப்படத்திற்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என கூறலாம் சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் இப்படம் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் நல்ல வரவேற்பு குடுத்தனர்,சென்னை கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷ் புதுப்பேட்டை-2 பற்றி கூறும் போது முதல் பாகத்திற்கும் கொக்கி குமார் கதாபாத்திரதிற்கும் எவ்வித பாதிப்பும் ஆகிவிடாமல் கதை அமையவேண்டும் என்பதில் நான் கவனமாக உள்ளேன் என்று தனுஷ் கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல் அது அவ்வளவு எளிய காரியம் இல்லை என்பதால் கதை அதற்கு ஏற்றார் போல் எழுதி வருவதாக தனுஷ் கூறியுள்ளார்.விரைவில் ஓரு வெற்றி கூட்டணி மீண்டும் யுவன் இசையில் காணலாம் என தெரிகிறது.